Wednesday, August 6, 2008

கடலாடியில் அரசு பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமிக்க வலியுறுத்தல்

கடலாடியில் அரசு பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமிக்க வலியுறுத்தல்


கடலாடி, ஆக. 6: கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளிக் கு போதிய ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என சமாதான கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கடலாடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வர்த்தக சங்கத் தினர் கடந்த 31ம் தேதி கடை யடைப்பு போராட் டம் நடத்தினர்.

இதையடுத்து, வர்த்தகர்கள் மற்றும் கட லாடி அரசு மருத்துவ மனை டாக்டர்கள் பிரச்¬ னகள் குறித்த சமா தான கூட்டம் தாலுகா அலு வலகத்தில் நேற்று நடந்தது. தாசில்தார் கதிரேசன், மண்டல துணை வட்டாட்சியர் ரவிராஜ், வர்த்தக சங்க தலைவர் ராமலிங்கம், செயலாளர் செல்வராஜ், டாக்டர்கள் கணேச மூர்த்தி, முத்தரசன் மற்றும் பலர் கலந்துகொண்ட னர்.
கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், சாயல்குடியில் இருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தில் கடலாடி பகுதிவாசிகளுக்கு இருக் கைகள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத் தனர். இந்த கோரிக்கைகள் நிறைவேற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

கடலாடி அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இருக்க வேண் டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், வெளியூரில் இருந்து வரு வதால் மருத்துவ மனை யில் தங்கி சிகிச்சை அளிக்க முடியாது என டாக்டர்கள் மறுத்து விட் டனர். இதுகுறித்து பின் னர் ஒரு தேதியில் மாவட்ட மருத்துவ அதிகாரியிடம் பேசலாம் என தாசில்தார் கதிரேசன் தெரிவித்தார்.

No comments: