Thursday, August 7, 2008

நூற்றாண்டு விழாவையொட்டி தேவர் சிறப்பு தபால் தலை வெளியிட கோரிக்கை

நூற்றாண்டு விழாவையொட்டி தேவர் சிறப்பு தபால் தலை வெளியிட கோரிக்கை


மதுரை, ஆக.7-

பசும்பொன் தேவர் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறப்பு தபால் தலை வெளியிட வேண்டும் என செக்கானூரணியில் நடந்த அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாடு

அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் முதல் மாநாடு, பசும்பொன் தேவர் நூற்றாண்டு விழா ஆகியவை செக்கானூரணியில் நடைபெற்றது. நிறுவனர் பி.என்.அம்மாவாசி தலைமை தாங்கினார். எஸ்.ஏ.சுரேந்திரன் வரவேற்று பேசினார்.

இதனையொட்டி நடந்த பேரணிக்கு பி.கனி தலைமை தாங்கினார். டீக்கடை செல்வம் முன்னிலை வகித்தார். கவிஞர் கோ தொடங்கி வைத்தார். மாநாட்டில் காங்கிரஸ் பிரமுகர் ரா.சொக்கலிங்கம், ஜனதா தள மாநில பொதுச்செயலாளர் க.ஜான்மோசஸ், தமிழ்தாங்கி சங்க பொதுச்செயலாளர் மா.திரவியபாண்டியன், வழக்கறிஞர் சோலை சுப்பிரமணியன், பிரமலை கள்ளர் பேரவை மாநில அமைப்பாளர் ஆர். அருளானந்தம், ராணுவவீரர் எஸ்.வேலுச்சாமி, கனகமகால் ஆர்.கார்த்திகேயன், தியாகி பாலகிருஷ் ணன் ஆகியோர் பேசினார்கள்.

பசும்பொன் தேவர் நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு தபால் தலை வெளியிட வேண்டும், 58 கிராம கால்வாய் திட்ட பணிகளை துரிதப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

நிர்வாகிகள் தேர்வு

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அகில இந்திய பொதுச்செயலாளராக பி.என்.அம்மாவாசி, தலைவராக ரா.ஜெயச்சந்திரன், பொருளாளராக பி.கே.செல்வம், மாநில தலைவராக ஏ.எஸ்.மச்சராசுத்தேவர், செயலாளராக பிச்சைஅம்பலம், பொருளாளராக எல்.செல்வம், மாநில இளைஞரணி செயலாளராக அ.மணிகண்டன், தொழிற்சங்க தலைவராக பரட்டையாண்டி, ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மதுரை மாவட்ட தலைவராக எஸ்.அய்யாவுத்தேவர், செயலாளராக கே.நேரு, பொருளாளராக பி.செல்லப்பா, மாவட்ட தொழிற்சங்க தலைவராக ஜே.ஆனந்தன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

No comments: