Thursday, August 7, 2008

கடலாடியை சேர்ந்த கல்லூரி மாணவி கொலை வழக்கில் மர்மம் நீடிப்பு

கடலாடியை சேர்ந்த கல்லூரி மாணவி கொலை வழக்கில் மர்மம் நீடிப்பு
பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை


சாயல்குடி,ஆக.7-

கடலாடியை சேர்ந்த கல் லூரி மாணவி கொலை வழக்கில் தொடர்ந்து மர் மம் நீடித்து வருகிறது. இது குறித்து போலீசார் பல் வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

இளம்பெண்

கடலாடி அருகே இளஞ்செம்பூர் போலீஸ் சரகம் சவேரியார் பட்டினத்தை சேர்ந்தவர் சேசு. இவரது மகள் அருள்ஜோதி(வயது 20). இவர் கடந்த 1-ந்தேதி மதுரை மாவட்டம் சோழவந்தான் ரெயில் நிலையம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிணத்திற்கு அருகில் கிடந்த சூட்கேசை போலீ சார் கைப்பற்றி சோதனை யிட்ட போது, ஒரு டைரி சிக் கியது. அதில் அவர் சென் னையில் உள்ள ஒரு கல்லூ ரியில் படித்து வந்தது தெரிய வந்தது. ஆனால் அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? ஏன் சோழவந்தானுக்கு வந்தார்? ஏன் கொலை செய்யப்பட் டார்? என்பது குறித்து போலீ சார் குழப்பமடைந்தனர்.

தகவல்

உடனே போலீசார் கல்லூ ரியை தொடர்பு கொண்ட போது, அவர்கள் அருள் ஜோதி கல்லூரியில் சேரும் போது கொடுத்த தொலை பேசி எண்ணை தெரிவித்த னர். அது சவேரியார் பட் டினம் தூய சந்தியாகப்பர் ஆலய பாதிரியார் டேவிட் என்பவரது டெலிபோன் எண் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பாதிரியார் டேவிட்டை தொடர்பு கொண்டு அருள் ஜோதி இறந்த தகவல் பற்றி தெரிவித்தனர். இதுகுறித்து அவர் அருள்ஜோதியின் தாயார் வியாகுல அம்மாள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவித்தார். அதனை தொடர்ந்து அவர்கள் சோழ வந்தானுக்கு சென்று பிரேத பரிசோதனைக்கு பின்னர் பிணத்தை பெற்று அடக்கம் செய்தனர்.

விசாரணை

இந்நிலையில் சோழ வந் தான் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சாத்தப்பன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சவேரியார் பட்டினம் வந்தனர். அங்கு பாதிரியார் டேவிட், தாயார் வியாகுல அம்மாள் மற்றும் உறவினர் களிடம் விசாரணை நடத்தினர். மேலும் இளம்பெண் அருள் ஜோதி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments: