Saturday, August 9, 2008

அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி விழாவில் இலவச மிதிவண்டி வழங்கல்

321 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் அமைச்சர் சுப.தங்கவேலன் வழங்கினார்

ராமநாதபுரம் ஆக 9.,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மேல்நிலை வகுப்பு பயிலும் 321 மாணவர்களுக்கு இலவச மிதி வண்டிகளை குடிசை மாற்று மற்றும் இடவசதிக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் சுப.தங்கவேலனஅ வழங்கினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் கிர்லோஷ்குமார் அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார். அமைச்சர் பேசும்போது

தெரிவித்ததாவது: தமிழக அரசு பொறுப்பேற்ற பின்னர் மாணவர்களுக்கு இலவச மிதி வண்டிகள் இலவச பேருந்து அனுமதி அட்டை போன்றவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசின் சார்பில் இலவச மிதி வண்டி வழங்கும் திட்டம் துவங்கப்பட்ட காலத்தில் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன.தற்போது மிதி வண்டிகள் இலவசமாக மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. கல்வித்துறையின் வளர்ச்சிக்காக மாணவர்களின் நலன் கருதி அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு முன்னேற்றத்திட்டங்களுள் ஒன்றாக இத்திட்டம் அமைந்துள்ளது.

மாணவர்களை மென்மேலும் ஊக்குவிக்க கடந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் வழியில் பயின்று மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 1000மாணவர்களுக்கு மடி கணினிகளை அரசு வழங்கியுள்ளது.மேலும் எல்காட் நிறுவனத்தின் மூலம் குறைந்த விலையில் கணினி கருவிகள் மாணவர்களுக்கு வழங்கவும் அரசு அறிவித்துள்ளது என்றார்.

விழாவில் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கே.முருகவேல் முன்னிலையுரையாற்றினார்.அபிராமம் பேரூராட்சி தலைவர் கணேசன்,முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஏ.எம்.முகமது இத்ரீஸ் ஆகியோர் வாழ்த்துறை வழங்கினார்கள்.

No comments: