Friday, August 15, 2008

""சுதந்திரம் காத்திடுவோம்''

""சுதந்திரம் காத்திடுவோம்''

வீ. சுந்தரமகாலிங்கம்



இப்போது இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு,

அப்துல் கலாம் கண்ட கனவு

இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டில்

இந்தியா வல்லரசு ஆகணுமாம்!

நல்லரசாகவும் நிலவ வேண்டும்!

கொஞ்சம் எனக்குச் சந்தேகம்

அதற்குள் இந்திய தேசம்

மக்கள் தொகையில் முதன்மையாகலாம்!

(இ)லஞ்சம் பெறுவதிலோ உலகில்

கஞ்சத்தனமே இல்லாமல் அஞ்சாம்

இடமாகலாம்! நினைப்பது ஒன்றும்

நடப்பது வேரொன்றும் என்பதாம்

இதுதானோ! வேலை தேடுவோர் பட்டியலில்

இரண்டு கோடியாம்! வறுமைக்

கோட்டின்கீழ் முப்பது கோடியாம். இன்று!

நாட்டில் எங்கும் தீவிரவாதிகளின்

நடமாட்டம்! குண்டுகள் வெடித்துக்

கொண்டாட்டம் கண்டும், மக்கள்,

பயந்து கொண்டும் வாழ்கிறார்!

பயனுள்ள செயல்கள் எல்லாம் தயங்காமல் செயல்பட வேண்டும்

இந்தியா எதிலும் முந்திச் செல்ல

அணுசக்தி, ஒப்பந்தம் நிறைவேற்றிட

அணுகியதில், பாராளுமன்றம் நம்பிக்கை

வோட்டில் பெற்றதாம் வெற்றி!

கோடி கோடியாய்ப் பெற்றனராம் வோட்டுப் போட!

மூடிமூடி வைத்தாலும் மறைக்க முடியுமா?

விலைவாசியோ வானளவு உயர்ந்திட

மலைப்பாக இருக்கிறார் மக்கள்!

நிலையாக விலைவாசி நின்றிட

அலையாக ஆட்சியர் இயங்கிட

கலையாத ஆட்சி நிறுவிட

விலைபோகாமல் தேர்தலில் வென்றிட

தலையாய சேவைகள் செய்திடுவீர்!

உலைபோல உழைத்திடுவோம்! செதுக்கிய

சிலையான சுதந்திரத்தைக் காத்திடுவோம்!

No comments: