Friday, August 15, 2008

அரசு தொழிற் பயிற்சிப் பள்ளியில் இலவச குறுகிய கால பயிற்சிகள்

அரசு தொழிற் பயிற்சிப் பள்ளியில் இலவச குறுகிய கால பயிற்சிகள்

ராமநாதபுரம், ஆக. 14: பரமக்குடி அரசினர் தொழிற்பயிற்சிப் பள்ளியில் இலவசமாக குறுகிய கால பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. பயிற்சி முடிவில் அவர்கள் அனைவருக்கும் அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதன் முதல்வர் க.மணி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பரமக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 45 நாட்கள் தினசரி மாலை 5 மணி முதல் 8 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி முகாம் இம்மாதம் 18 ஆம் தேதி துவங்குகிறது.

வயது 14 முதல் 40 வரையும், 5 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். வீட்டு வயரிங், கடைசலர், கியாஸ் வெல்டிங், ஆர்க் வெல்டிங், வீட்டு உபயோகப் பொருட்கள் பயன்படுத்துதல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. தற்போது பிளஸ்-1, பிளஸ் 2 படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும், தொழிற்சாலைகளில் சான்றிதழ் இல்லாமல் வேலை செய்பவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பயிற்சி முடித்தவர்களுக்கு அரசின் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் முதல்வர் சு.மணி தெரிவித்தார்.

No comments: